ரஜினியின் ‘பேட்ட’ படத்தை முடித்து, சிரஞ்சீவியின் ’சை ரா’ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

Others

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது 96 மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வரலாற்றுப் படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி’யில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் நெருங்கிய உதவியாளராக ஒபய்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், தான் தமிழ் பேசும் நபராக நடித்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கன்னட நடிகர் சுதீப் உடனான படக்காட்சியின் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிதாப் பச்சன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணிபுரிகிறார். இப்படம் வரும் 2019 கோடையில் திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *