ஒரு நாள் காத்து- கஜா புயலின் கோரத்தை சொல்லும் படம்

Kollywood Teaser

ஒரு நாள் கூத்து என்ற திரைப்படம் சில நாட்களுக்கு முன் வந்தது. தற்போது ஒரு நாள் காத்து என்ற திரைப்படம் ஆவணப்படமாக வந்துள்ளது.

கஜா புயல் சில நாட்களுக்கு முன் டெல்டா மாவட்டங்களான, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கோர தாண்டவமாடியதன் மூலம் பலரது அடிப்படை வாழ்க்கையை சிதைத்து விட்டது.

தென்னை விவசாயத்தை பெரிதும் நம்பியிருந்த இப்பகுதி மக்கள் வளர்த்த தென்னை மரங்கள் அனைத்தும் சாய்ந்து போனதால் நிம்மதி இழந்தனர்.

ஒரு நா காத்து ( கஜா அழிவிற்கு பின் ) – தமிழக டெல்டா பகுதியை உலுக்கி பலரின் வாழ்வாதாரத்தை அசைத்த கஜா புயலின் தாக்கத்தை மக்களின் குரலாக வெளிப்படுத்தும் ஆவணப்படம்

இயக்கம்: ஐயன் கார்த்திகேயன் (@iyankarthikeyan)
இசை: குரு கல்யாண் (@gurukalyanmusic)
தயாரிப்பு: தி பிளைன் டால்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *