போதை கடத்தல் ராணியாக சாய்பிரியங்கா

Kollywood

சென்னையில் நிகழும் போதை உலக ரகசியங்களை பற்றி ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற படம் தயாராகியுள்ளது. ’ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்’ என தொடங்கும் படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். டீசருக்கும் டீசரில் இடம்பெற்ற காட்சிகளுக்காகவும் கார்த்திக் குமார் ஒளிப்பதிவுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
படத்தை இயக்கி தயாரித்து இருக்கும் சிவி.குமாரிடம் கேட்டபோது ‘இது நகரத்தின் இன்னொரு பக்கத்தை காட்டும். இயக்குனர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், விஷ்வா ஆகியோர் வில்லன்களாக நடிக்க சாய் பிரியங்கா நாயகியாக நடிக்கிறார்.
ஆடுகளம் நரேன், பி.எல்.தேனப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர். ராத் கரிஷ் படத்தொகுப்பு செய்ய, ஹரி டபுசியா இசையமைத்து இருக்கிறார். டிவி சீரியல்களில் நடித்து வந்த பிரியங்காவை கதாநாயகியாக்கி இருக்கிறோம். போதை கடத்தல் கும்பலின் தலைவியாக நடித்து இருக்கிறார். கணவனுக்காக கும்பலில் சேரும் அவர் எப்படி திசை மாறுகிறார் என்பதே கதை. வேலு பிரபாகரனின் வில்லத்தனம் புதிதாக இருக்கும். ஹெராயின் என்ற விலை உயர்ந்த போதைப்பொருளை பின்னணியாக கொண்ட கதை. இந்தி படம் பார்த்த உணர்வு கிடைக்கும். தமிழுக்கு மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *