தெலுங்கில் வரவேற்பை பெறாத அஜித்தின் விஸ்வாசம்

Tolly wood
Image result for விஸ்வாசம் photos

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்‘. ஜனவரி 10-ந் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்துடன் வெளியானது. தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.
படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், “இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் 1ந் தேதி வெளியானது. எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் படம் தோல்வியை சந்திக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். படம் வெளியான 2 நாட்களின் மொத்த வசூலே 1 கோடிக்கும் குறைவு தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அஜித் நடித்த படங்களின் தெலுங்கு டப்பிங் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அந்த சோகம் தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *