ஆன்ட்ரியாவின் இரட்டை வேடம்

News

ஆன்ட்ரியா, ‘தரமணி’, ‘அவள்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வடசென்னை’ போன்ற படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இதை தொடர்ந்து, தில் சத்யா இயக்கும் ‘மாளிகை’ படத்தில் இளவரசியாகவும், போலீசாகவும் நடிக்க இருக்கிறார்.
ஆன்ட்ரியாவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து தில் சத்யா இயக்கிக்கொண்டிருக்கும் படம், ‘மாளிகை’. இந்தப் படத்தில், அவர் காவல் துறை அதிகாரியாகவும், கடந்த காலத்தின் இளவரசியாகவும் நடிக்க இருக்கிறார். படம்குறித்து தில் சத்யா அளித்துள்ள பேட்டியில், ’ஆக்‌‌ஷன், பேன்டசி, ஹாரர் என மூன்று ஜானர்களில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ரியா நடிக்கும் இளவரசி கதாபாத்திரம், பேன்டசி பகுதியில் இடம்பெறும். அது, 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை. போலீசாக நடிக்கும் ஆண்ட்ரியா, ஒரு மாளிகைக்கு விசாரணைக்காகச் செல்கிறார்.
அங்கு, அவருக்கு கடந்த கால நினைவுகள் ஞாபகத்துக்கு வருவதில் இருந்து படம் அப்படியே போகும்“ என்று தெரிவித்திருக்கிறார். கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், மனோ பாலா, ‘ஜாங்கிரி’ மதுமிதா போன்ற நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். படத்தின் டீசரை விஜய் ஆன்டனி வெளியிட்டு வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *